போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் “குடு நோனா” 25 லட்சம் ரூபா பெறுமதியான போதை வஸ்துவுடன் கைது
Kanimoli
2 years ago

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் “குடு நோனா”வை 25 லட்சம் ரூபா பெறுமதியான போதை வஸ்துவுடன் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள், வீட்டில் எல்லா இடங்களிலும் தேடுதல் நடத்திய போதும் போதை போருளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பெண் பொலிஸாரை ஈடுபடுத்தி குடு நோனாவை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன்போது அவர் அணிந்திருந்த மார்பு கச்சையில் மறைத்து வைத்திருந்த போதை வஸ்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



